பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் விஜய்

சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
cm vijay
Published on

வடகிழக்கு பருவமழை

பொதுவாக தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைகிறது.

தமிழகத்தின் மொத்த ஆண்டு மழையளவில் பெரும்பகுதி இந்த வடகிழக்கு பருவமழையில் தான் கிடைக்கிறது.

டெல்டா மற்றும் இதர மாவட்டங்களின் சாகுபடிப் பணிகளுக்கு இப்பருவமழை மிகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர் ஆதரமாக இந்த பருவமழை இருக்கிறது.

முன்னெச்சரிக்கை

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையானது தொடங்க உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுக்காப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

முதல்வர் ஆலோசனை

வடகிழக்கு பருவழையானது தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் முதல்வர் விஜய்.

காவிரி படுகை, கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்.

துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.

X

Maalai Malar
www.maalaimalar.com