தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த மழை குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 15 மற்றும் 21-ந்தேதி இடையே தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் 17-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் 3-வது வாரம் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கக்கூடிய மழை தமிழகத்தில் குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் போதுமான ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி ஜனவரி 2-வது வாரம் வரை நீடித்தது.

அந்தமான் கடல் பகுதியில் 11-ந்தேதியையொட்டி மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் 13-ந்தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மேலும் புயல் சின்னமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து 4 நாட்களில் அதாவது 17-ந்தேதியில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் நடுவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.