ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை... இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

பதவி விலகலை வாபஸ் பெறக் கோரியும், எம்எல்ஏவாக தொடர அனுமதி கோரியும் தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு.
ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை... இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
Published on

சட்டமன்றப் பேரவை விதிகளின்படி, ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதற்கு எந்தவொரு விதியும் இல்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் அலுவலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டாம் என்றும், மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தொடர விரும்புவதாகவும் பேரவைச் செயலரிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் இந்த விளக்கமும், அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தலே தீர்வு

இசக்கி சுப்பையா பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாசமுத்திரம் தொகுதி ஏற்கனவே காலியானதாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், தற்போது அங்கு இடைத்தேர்தல் நடத்துவது மட்டுமே சட்டப்படியான ஒரே தீர்வு எனச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

சபாநாயகரின் பதில்

இந்த விவகாரம் தொடர்பாகச் சபாநாயகர் தரப்பிலிருந்து இசக்கி சுப்பையாவிற்கு அதிகாரப்பூர்வப் பதில் கடிதம் அனுப்பப்பட உள்ளது.

இசக்கி சுப்பையாவின் மறுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது தனது ராஜினாமா மனுவை திரும்பப் பெறுவதாகவும், இடைத்தேர்தல் வரும்வரை தனது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் இசக்கி சுப்பையா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.

வழக்கு ஒத்திவைப்பு

தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com