100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை- எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்ற சாதனையும் இடம்பெற்றுள்ளது.
Edappadi pazhanisamy
Published on

100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

100 நாள் சாதனை

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது. இதையொட்டி தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ‘100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி’ என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் தமிழக அரசின் திட்டங்கள் விளக்கி கூறப் பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் விஜய் ஏற்க னவே கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பேசியதும் இடம்பெற்றுள்ளது. வீடி யோவின் முடிவில் ‘பிரியமு டன் விஜய்’ என்று முதலமைச்சர் விஜய்யின் கையெழுத்தும் இடம்பெற்று உள்ளது.

அந்த வீடியோவில் விஜய் பேசி இருப்பதாவது:-

ஒரு புதிய தொடக்கம்

சி.ஜோசப் விஜய் என்னும் நான், வாங்க... எல்லோரும் சேர்ந்து ஒரு பிரெஷ் ஆட்சி, ஒரு புதிய ஆட்சியை கொடுப்போம். இது ஒரு புதிய தொடக்கம். புதிய சகாப்தம்.

பெண்கள் பாதுகாப்பை மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பேன். போதைப் பொருள் கலாச்சாரத்தில் இருந்து நமது பசங்களை காப்பாற்ற வேண்டியது நமது அரசினுடைய பொறுப்பு. கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், பஸ் வசதி இந்த மாதிரி விஷயங்களில்தான் என்னுடைய முழு முதல் கவனம்.

இது உங்களுடைய ஆட்சி, உங்களுக்கு அதில் எந்தவித மான சந்தேகமும் வேண்டாம். இந்த நேரத்தில் இதை நான் சொல்லணும். அரசியலுக்கு வந்த உங்கள் விஜய்யை, விஜய் தம்பி, விஜி தம்பி, அண்ணா நீ வாண்ணா, நண்பா, நீ வா நண்பா நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்று சொல்லி அவ்வளவு உறவா என்னை ஏற்றுக் கொண்டீர்கள். 8 கோடி மக்களும் என் மக்கள்தானே. நம்பிக்கையா இருங்க.

இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசி உள்ளார்.

சிங்கப்பெண் அதிரடிப்படை

மேலும் அந்த வீடியோ வில் தமிழக அரசின் திட்டங்களான 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, ‘அண்ணன் சீர்’, 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை, சிறப்பு பேதைப்பொருள் தடுப்பு படை, பெருந்தலை வர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்க ளுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியு டன் கூடிய நவீன பிராண்டட் மிதி வண்டிகள், வெற்றி வீடு திட்டம் ஆகிய திட்டங்கள் இடம்பெற்று உள்ளன. மேலும் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்ற சாதனையும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், 100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

100 நாள் தவெக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அறிவிக்கவும் இல்லை.

தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் இந்த 100 நாள் ஆட்சியில் சாதனை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com