தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை

பர்மாவில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.
NIA Raid
Published on

தமிழ்நாட்டில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

2024-ம் ஆண்டு அந்தமானில் போதைப்பொருட்கள் சிக்கிய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பிடிபட்ட 7 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பர்மாவில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.

மியான்மரில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com