முதலமைச்சர் இல்லம் அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை

குழந்தையின் அழுகுரல் சத்தத்தை அவ்வழியே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் கேட்டுள்ளனர்.
சிசிடிவி
Published on: 
Summary

முதல்வர் விஜய் வீட்டின் அருகே பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் உண்மை வெளிவந்துள்ளது.

முதல்வர் விஜய் வீட்டின் அருகே தொப்புள் கொடியுடன் கிடந்த பெண் குழந்தையை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சென்னை நீலாங்கரையில் முதலமைச்சர் விஜய் வீடு உள்ளது. அங்கிருந்து 400 மீ. துாரத்தில் கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4வது பிரதான சாலையில் நேற்று முன் தினம் காலையில் சாலையோரம் குழந்தையின் அழுகுரல் சத்தத்தை அவ்வழியே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் கேட்டுள்ளனர்.

மீட்பு

அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமான தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை கிடந்தது.

குழந்தையை மீட்டு, நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளித்து, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சைக்கு பிறகு குழந்தை நலமுடன் உள்ளது.

விசாரணை

பெற்ற தாயே குழந்தையைக் கைவிட்டுச் சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கிய போலீசார் குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி

அதில், நள்ளிரவு நேரத்தில் 2 பெண்கள் அந்தச் சாலைக்கு வந்தது பதிவாகியுள்ளது. அவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த பையிலிருந்து குழந்தையை எடுத்து, மற்றொரு பெண் கை காட்டிய இடத்தில் சாலையோரம் வைத்துவிட்டு செல்கிறார்.

குழந்தையை வைத்துவிட்டுச் சென்ற பெண், கண்ணீர் விட்டபடியே அங்கிருந்து திரும்பிச் செல்வதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார், குழந்தையை விட்டுச் சென்றது நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில் வசிக்கும் 35 வயதான பெண் என்பதை கண்டுபிடித்தனர்.

தாய்

விசாரணையில் அவரே அக்குழந்தையின் தாய் என தெரியவந்தது. குழந்தையின் தாய் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அவருக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் தந்தை உரிய ஆதரவு தராததால் குழந்தையை சாலைவில் விட்டுச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.

தனக்கு திருமணமாகாததால் குழந்தையை வளர்க்க விருப்பமில்லை என குழந்தையின் தாய் கூறியதாக கூறப்படுகிறது. எனவே குழந்தைகள் நலக்குழு பொறுப்பில் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

X