தொடர் மழை: மலைப்பகுதிகளில் உருவான புதிய நீர்வீழ்ச்சிகள்- சுற்றுலா பயணிகள் வியப்பு

மலைச்சாரல் மற்றும் மேக மூட்டங்களுக்கிடையே ரம்மியமான சூழ்நிலையில் மலைகளுக்கிடையே நீர்வீழ்ச்சிகள் என இயற்கையான சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து செல்கின்றனர்.
தொடர் மழை: மலைப்பகுதிகளில் உருவான புதிய நீர்வீழ்ச்சிகள்- சுற்றுலா பயணிகள் வியப்பு
Published on: 
Summary

மலைகளுக்கிடையே வெள்ளியை உருக்கி ஊற்றுவது போல் வரும் காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து, வியந்து புகைப்படம் எடுத்து ரசித்து செல்கின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு வார காலம் ஆகிய நிலையில் வறட்சியாக இருந்த வனப்பகுதிகள் மீண்டும் பசுமை திரும்பி உள்ளதால் இந்த பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் மலைப்பாதைகளில் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது.

நீர்வீழ்ச்சிகள்

இதனிடையே தொடர் மழையால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் மலைகளுக்கிடையே வெள்ளியை உருக்கி ஊற்றுவது போல் வரும் காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து, வியந்து புகைப்படம் எடுத்து ரசித்து செல்கின்றனர்.

நீர்வீழ்ச்சிகள்

மேலும் மலைச்சாரல் மற்றும் மேக மூட்டங்களுக்கிடையே ரம்மியமான சூழ்நிலையில் மலைகளுக்கிடையே நீர்வீழ்ச்சிகள் என இயற்கையான சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து செல்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com