பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு

கடலோர ஒழுங்குமுறை மதிப்பீடு, சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Pattinapakkam - National Green Tribunal
Published on: 
Summary

புதிய தலைமைச் செயலகம் கட்டுவது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அறிவிப்புக்கு எதிரானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில், 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். அடுத்த ஐந்து நாட்களில் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜய் ஆனந்த், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அடையாறு முகத்துவாரத்துக்கு அருகில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் 15 மாடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்த பகுதி நீரில் மூழ்கியது. ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இந்த பகுதி, மீனவர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

கடலோர ஒழுங்குமுறை மதிப்பீடு, சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அறிவிப்புக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com