ஜெம் வீரமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட செல்போனில் புதிய ஆபாச வீடியோக்கள்?

கணேசன் வாக்குமூலத்தை தொடர்ந்து போலீஸ் நடவடிக்கை - டிஜிட்டல் ஆதாரங்களை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு
Gem Veeramani
Published on
Summary

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் ஜெம் வீரமணி குறித்து தினமும் புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்த வழக்கில் கைதான கணேசன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று பெரம்பூரில் உள்ள பிரகாஷ் வீடு, ராயப்பேட்டையில் உள்ள பிரகாசின் அலுவலகம், கோபாலபுரத்தில் உள்ள வீரமணியின் அலுவலகங்கள், தி.நகரில் உள்ள வீடு உள்பட 5 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

செல்போன் ஆய்வு தீவிரம்

இந்த சோதனையில் செல்போன்கள், ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 3 இடங்களில் சோதனை நிறைவு பெற்ற நிலையில் கோபாலபுரம், தி.நகர் ஆகிய இடங்களில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

சோதனையில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், ஆவணங்கள் போலீஸ் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் டிஜிட்டல் ஆவணங்களை தொழில் நுட்ப வல்லுனர்கள் மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கூடுதலாக ஆபாச வீடியோக்கள்?

ஏற்கனவே பாலியல் தொடர்பாக வீடியோ வெளியான நிலையில் தற்போது கைப்பற்றப்பட்ட செல்போன்களில் கூடுதலாக ஆபாச வீடியோக்கள் இருக்கிறதா என்றும் போலீசார் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் மற்றும் கணேசனின் செல்போன்கள் ஆய்வ கத்துக்கு அனுப்பப்பட்டு தொழில்நுட்ப ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

டிஜிட்டல் ஆதாரம் சேகரிப்பு

செல்போன்களில் இருந்து நீக்கப்பட்ட தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், உரையாடல்கள் மற்றும் அவை பகிரப்பட்டதற்கான தடயங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வின் மூலம் மேலும் எத்தனை சிறுமிகளுடன் தொடர்புடைய வீடியோ காட்சிகள் உள்ளன? அந்த காட்சிகள் வேறு யாருக்காவது அனுப்பப்பட்டுள்ளனவா? வீடியோ காட்சிகளை பதிவு செய்தது யார்? அவற்றை சேமித்து வைத்திருந்ததன் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தகவல்களை திரட்டி வருகின்றனர்.

ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் வெளியாகும் புதிய தகவல்கள் விசாரணையில் அடுத்தகட்ட நகர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com