ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு புதிய வரவு: அசாமில் இருந்து வந்தடைந்தது குட்டி யானை

குட்டி யானையை காண கோவில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர்.
Baby elephant
Published on: 

உலகப் புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு புதிதாக 'சிவா' என்ற 5 வயது நிரம்பிய குட்டி ஆண் யானை கொண்டுவரப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இருந்து பிரத்யேக லாரி மூலம் புறப்பட்ட இந்த யானை, சுமார் 10 நாட்கள் தொடர் பயணத்திற்குப் பிறகு பாதுகாப்பாக ராமேஸ்வரம் வந்தடைந்தது.

மாபெரும் வரவேற்பு

ராமேஸ்வரம் வந்தடைந்த குட்டி யானை சிவாவுக்கு கோவில் நிர்வாகத்தினர், குருக்கள்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. யானைக்கு மாலை அணிவித்து, பழங்கள் வழங்கி, தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டது. ராமேசுவரம் கோவிலில் ஏற்கனவே 'ராமலட்சுமி' என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கூடுதலாகக் கொண்டுவரப்பட்டுள்ள சிவா யானை, கோவில் நிர்வாகம் மற்றும் சிறப்புப் பராமரிப்பாளர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. புதிதாகக் கொண்டுவரப்பட்ட குட்டி யானையை காண கோவில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com