தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து தமிழ் நாடு அரசு அரசாணை

பழைய அரசாணைகள் ரத்து செய்யப்பட்டு இந்த புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.
Autos
Published on: 

சென்னை பெருநகர பகுதி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இயங்கும் கான்ட்ராக்ட் கேரேஜ் ஆட்டோ ரிக்சாகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணையின்படி இந்த புதிய கட்டணம் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 67-ன் கீழ் இதற்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பழைய அரசாணைகள் ரத்து செய்யப்பட்டு இந்த புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.

புதிய கட்டணம்:

அரசாணையின்படி, ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தூரம் 1.8 கிலோ மீட்டராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ. 25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காத்திருப்பு கட்டணம் 1 நிமிடத்திற்கு தலா ரூ. 1 என நிர்ணயம் செய்யப்பட்ட்டுள்ளது.

மலைப்பாதைகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ. 30 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேர கட்டணம் (இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) சாதாரண கட்டணத்தை விட 1.5 மடங்கு கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com