குப்பை கூடமாக மாறிவரும் நெமிலிச்சேரி ஏரி

திருநின்றவூர், பட்டாபிராம், நடுக்குத்தகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கரைப்பகுதியில் கொட்டுவதால் எங்களால் இந்த பகுதியில் வசிக்க முடியவில்லை.
குப்பை கூடமாக மாறிவரும் நெமிலிச்சேரி ஏரி
Published on: 
Summary

ஏரியை சீரமைத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏரியை சுற்றி நடைப்பயிற்சி செய்யும் வகையில் உள்ளது போல் மாற்றி தர வேண்டும்.

சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் ஆவடி அடுத்த திருநின்றவூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது நெமிலிச்சேரி ஏரி. இந்த ஏரியை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

ஏரி

அதுமட்டுமில்லாமல் கல்லூரி, பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளன. இந்த நிலையில் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் குப்பைகளை இந்த ஏரியில் கரைப்பகுதியில் வந்து தினமும் கொட்டி விட்டு செல்கின்றனர்.

இதனால் டன் கணக்கில் குப்பைகள் சேர்ந்து அந்தப் பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது. அது மட்டுமல்லாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் ஏற்படுகிறது.

இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

நாங்கள் சுத்தமான காற்று சுகாதாரம் வேண்டும் என்பதற்காகத்தான் சென்னையின் புறநகர் பகுதியான இந்த பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வந்தோம். ஆனால் இங்குள்ள திருநின்றவூர், பட்டாபிராம், பாக்கம், பெருமாள்பட்டு, நடுக்குத்தகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கரைப்பகுதியில் கொட்டுவதால் எங்களால் இந்த பகுதியில் வசிக்க முடியவில்லை.

மலேரியா

துர்நாற்றம் வீசுகிறது, அது மட்டும் இல்லாமல் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அதிக அளவில் குடியிருப்பு பகுதியில் வருகிறது.

எனவே இந்த ஏரியை சீரமைத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏரியை சுற்றி நடைப்பயிற்சி செய்யும் வகையில் உள்ளது போல் மாற்றி தர வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் எங்களுக்கு குப்பையையாவது அகற்றி ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X