'கல்வி மாபியாக்களின் கையில் நீட் மையம்': சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் அதிரடி பேச்சு!

நீட் தேர்வு முறையை மூலதனமாக வைத்து நாடு முழுவதும் தனியார் நீட் பயிற்சி மையங்கள் பிரம்மாண்ட வர்த்தகத்தை நடத்தி வருகின்றன.
MLA Thali Ramachandran
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் நீட் தேர்வு மற்றும் அதை சுற்றியுள்ள வர்த்தக அமைப்புகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சமூக நீதியின் ஆணிவேராக தமிழ்நாடு திகழ்கிறது. சமூகநீதியின் ஆணிவேரில் வெண்ணீரை ஊற்றுவது போல ஒன்றிய அரசு இளங்கலை மருத்துவப் படிப்பில் நீட் என்ற நுழைவுத்தேர்வவை ஒரு நவீன தீட்டை நுழைத்து தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்திருக்கிது. இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு அரியலுர் மாணவி அனிதா மற்றும் அவரை தொடர்ந்து அநேக மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

கல்வி மாபியாக்களின் ஆதிக்கம்:

நீட் தேர்வு முறையை மூலதனமாக வைத்து நாடு முழுவதும் புற்றீசல் போல தனியார் நீட் பயிற்சி மையங்கள் பிரம்மாண்ட வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. இத்தகைய மையங்களை அரசியல் பின்புலம் வாய்ந்த 'கல்வி மாபியாக்கள்' தான் இயக்கி வருகிறார்கள் என்று சாடிய அவர், இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

சமூக நீதிக்கும் ஏழை மாணவர்களுக்கும் பாதிப்பு

இவ்வளவு பெரிய தொகையைக் கட்டணமாகச் செலுத்த முடியாத கிராமப்புற, அடித்தட்டு மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவு தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. திறமை இருந்தும் பண வசதி இல்லாத காரணத்தால் ஏழை மாணவர்கள் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. எந்த உயர் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு கூடாது என்றார். மேலும், பொதுப்பட்டியலில் இருக்கும் நமது கல்விளை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி நீட் தேர்வு ரத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com