மதுரை பின்னணி- மக்கள் மாளிகையில் களைக்கட்டும் நவராத்திரி கொலு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வை மையமாகக் கொண்டு இந்த ஆண்டுக்கான கொலு அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு
Published on: 
Summary

சென்னை மக்கள் மாளிகையில் தொடங்கிய நவராத்திரி கொலு விழா தமிழர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கும்பாபிஷேகத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கொலுவில் தினசரி இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 20-ந்தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு விழா நேற்று தொடங்கியது. கவர்னர் அர்லேகர் நவராத்திரி விழாவை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மக்கள் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவில் தமிழர்களின் பராம்பரியம், கலை, ஆன்மிகப் பெருமையை பறைசாற்றும் வகையிலும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வை மையமாகக் கொண்டு இந்த ஆண்டுக்கான கொலு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அனுமதி

வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும் கொலு விழாவில் தினந்தோறும் பக்திப் பாடல்கள் (பஜனைகள்), கர்நாடக இசை மற்றும் இளம் கலைஞர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. மேலும் கொலுவை பார்வையிட நாளொன்றுக்கு பொதுமக்களில் சுமார் 200 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே, கொலு விழாவை தொடங்கி வைத்த கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறுகையில், நாட்டின் வளமான பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கும் அழகான நிகழ்வாக நவராத்திரி கொலு திகழ்கிறது என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com