தேசிய மருத்துவர்கள் தினம்: மாமல்லபுரத்தில் "ஆயுஷ்" இலவச மருத்துவ முகாம்

அரசு மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் நல்வாழ்வு மையத்தில் நடைபெற்றது.முகாமில் விழிப்புணர்வு ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
தேசிய மருத்துவர்கள் தினம்: மாமல்லபுரத்தில் "ஆயுஷ்" இலவச மருத்துவ முகாம்
Published on

மாமல்லபுரம்:

தேசிய மருத்துவர்கள் தினமான இன்று மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் நல்வாழ்வு மையத்தில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. துப்புரவு பணியாளர்கள், பாசி, மணி விற்கும் நரிக்குறவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர் வாணதி நாச்சியார் முன்னிலையில், ஆயுஷ் மருத்துவம் குறித்து மூச்சு பயிற்சி, யோகா, மசாஜ், ஆயில் குளியல், தியானம், சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சக ஊழியர்கள் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com