நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்தது- நாளை முதல் அமல்!

நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
Egg
Published on: 

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று 25 காசுகள் குறைந்து, ரூ.6 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் புதிய விலை நாளை காலை முதல் அமலுக்கு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை 625 காசுகளாக (ரூ.6.25) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 25 காசுகள் குறைக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 6 ரூபாயாக குறைந்துள்ளது. முட்டையின் நுகர்வு குறைந்துள்ளதால் விலை குறைந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X