தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா நியமனம்!

ஆயுதப்படை ஏடிஜிபி தினகரனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா நியமனம்!
Published on: 

தமிழ்நாட்டில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக உள்ள நஜ்முல் ஹோடா தாம்பரம் காவல் ஆணையராக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே காலியாக உள்ள இந்தப் பொறுப்பில் இவர் உடனடியாக பதவி ஏற்கிறார்.

ஆயுதப்படை ஏடிஜிபியாக பணியாற்றி வரும் தினகரன், மறு உத்தரவு வரும்வரை நஜ்முல் ஹோடா வகித்து வந்த செயலாக்க பிரிவு ஏடிஜிபி பணியையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X