

சென்னையில் இருந்து மதுரை வந்த மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,"தவெக ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்கின்றனர். மீண்டும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதிமுக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்து, மதுரை மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம் பேசியது தொடர்பான புகாரின் அடிப்படையில் மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் பி.எம்.மன்னனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், முஸ்தபா ஒன்றும் யோக்கியனும் இல்லை, அரிச்சந்திரனும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.
மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தவெக எம்எல்ஏ முஸ்தபாவும் மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனும் நெருங்கிய நண்பர்கள்.
பணம் கொடுத்து எம்எல்ஏவை விலைக்கு வாங்கி தவெக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிமுகவுக்கு இல்லை.
முஸ்தபா ஒன்றும் யோக்கியனும் இல்லை, அரிச்சந்திரனும் இல்லை.
நிர்வாகிகள் நியமனத்திற்கு பணம் வாங்குவதற்கு முஸ்தபாவின் உதவியாளர் பேசிய செய்தி வந்தது.
விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை திசைதிருப்புவதற்காக தான் பொய் குற்றச்சாட்டு.
7ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பிவிட்டு 6ம் தேதியே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதியை போன்று மன்னனை அடைத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளனர்.