

மழை பெய்து வரும் நிலையில் பெரியாறு அணைக்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரிக்கவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 116.35 அடியாக குறைந்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. எல்நினோ தாக்கத்தால் பருவமழை பெருமளவில் குறைந்தது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல்சாகுபடிக்கு வழக்கம்போல் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை. 3 மாதங்கள் கழித்தே தண்ணீர் திறக்கப்பட்டது.
அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் பெரியாறு அணைக்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரிக்கவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 116.35 அடியாக குறைந்துள்ளது. 570 கனஅடி நீர் வருகிற நிலையில் 400 கனஅடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையில் 1970 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.