திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு அணையில் அமைச்சர் என். ஆனந்த் திடீர் ஆய்வு

முக்கொம்பு மேலணையில் சேதமடைந்துள்ள காவிரி கதவணையை ரூ.126 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் என்.ஆனந்த் அறிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு அணையில் அமைச்சர் என். ஆனந்த் திடீர் ஆய்வு
Published on: 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் படி, இன்று காலை தமிழகஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கொம்பு மேலணையில் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

முக்கொம்பு அணை

கடந்த 2022-ம் ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, முக்கொம்பு மேலணையில் அமைந்துள்ள காவிரி கதவணை பலத்த சேதமடைந்தது. இதனைச் சீரமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, 2026–-2027-ம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது, முக்கொம்பு மேலணையில் சேதமடைந்துள்ள காவிரி கதவணையை ரூ.126 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் என்.ஆனந்த் அறிவித்தார்.

அமைச்சர் என் ஆனந்த்

அணையை பார்வையிட்ட அமைச்சர் என் ஆனந்த் அதன்படி, இன்று முக்கொம்பு மேலணைக்கு நேரில் சென்ற அமைச்சர் என்.ஆனந்த் வெள்ளப் பெருக்கின் போது சேதமடைந்த காவிரி கதவணையை பார்வையிட்டு, அதன் தற்போதைய நிலை மற்றும் புனரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், காவிரி கதவணையைப் புனரமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கும் வகையில், இன்னும் 15 தினங்களுக்குள் உரிய அரசாணை பெற்றுப் பணிகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் என்.ஆனந்த் அறிவுறுத்தினார்.

காவிரி ஆற்றின் நீர் மேலாண்மை

காவிரி ஆற்றின் நீர் மேலாண்மை, அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, காவிரி கதவணை புனரமைப்புப் பணிகளை விரைந்து செயல்படுத்திட முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆய்வின்போது, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா.கதிரவன் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

X