சேலம் 4 ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசலால் தவிக்கும் வாகன ஓட்டிகள்

சேலம் 4 ரோட்டில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் வாகனங்கள் ஊர்ந்த படியே செல்கின்றன.
சேலம் 4 ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசலால் தவிக்கும் வாகன ஓட்டிகள்
Published on: 
Summary

போக்குவரத்து நெரிசலை தடுக்க கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமித்து வாகன ஓட்டிகள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

தீபாவளி பண்டிகை அடுத்த (நவம்பர்) மாதம் 8-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை ருசித்து கொண்டாடும் முக்கிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை விளங்குகிறது.

பல்வேறு சலுகைகள்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், செல்போன் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. இதனால் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் புதிய ரக செல்போன்களையும் வாங்குவதற்காக மக்கள் குடும்பம், குடும்பமாக சேலத்தில் உள்ள கடைகளுக்கு வர தொடங்கி உள்ளனர்.

பொதுமக்கள்

கிராமப்புற பகுதிகளில் இருந்து அதிக அளவில் சேலம் மாநகருக்குள் பொது மக்கள் வர தொடங்கி உள்ளதால் சேலத்தில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் கடை வீதிகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடை வீதிகளில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம் 4 ரோடு பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரிப்பால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் நீண்ட தூரம் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.

போக்குவரத்து நெரிசல்

சேலம் 4 ரோட்டில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் வாகனங்கள் ஊர்ந்த படியே செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினசரி கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமித்து வாகன ஓட்டிகள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com