மூலைக்கரைப்பட்டி அருகே பாம்பு கடித்து 15 ஆடுகள் பலி

உயிரிழந்த 15 ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் இருக்கும் என உரிமையாளர் முத்துகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மூலைக்கரைப்பட்டி அருகே பாம்பு கடித்து 15 ஆடுகள் பலி
Published on: 

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல அரியகுளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முத்துகிருஷ்ணன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக மூடப்பட்ட கிடை ஒன்றில் அடைத்து வைப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவும் ஆடுகளை கிடைக்குள் அடைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆடுகள் உயிரிழப்பு

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கிடையை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது, கிடைக்குள் இருந்து சுமார் ஆறு அடி நீளமுள்ள பழுப்பு நிறப் பாம்பு ஒன்று வெளியேறியது. இதையடுத்து கிடைக்குள் சென்று பார்த்தபோது, மொத்தம் 15 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, 20 நாட்கள், 30 நாட்கள் மற்றும் 35 நாட்களே ஆன சிறிய ஆட்டுக்குட்டிகளும் உயிரிழந்துள்ளது. பாம்பு கடித்ததன் காரணமாகவே ஆடுகள் உயிரிழந்ததாக உரிமையாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

போலீசார் விசாரணை

உயிரிழந்த 15 ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் இருக்கும் என உரிமையாளர் முத்துகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஆடுகளை வளர்த்து வாழ்வாதாரம் நடத்தி வந்த நிலையில், ஒரே இரவில் இத்தனை ஆடுகளையும் இழந்த சம்பவம் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X