

பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 47 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அல்லது பரிசு பொருட்களை வழங்குவது என தேர்தல் விதி மீறல்கள் போன்றவற்றை கண்காணிக்க தேர்தல் பறக்கும் பட்டையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுராந்தகம் அடுத்த ராமாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் பட்டையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது வந்தவாசியில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் சுமார் ரூ.31 லட்சத்து 30 ஆயிரம், மற்றொரு காரில் ரூ.80 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கபப்ட்டது. இவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் பறக்கும் படையினர் அந்த வழியாக வந்த காரை சோதனை மேற்கொண்டனர் அதில் ரூ.2 லட்சம் ஆவணமின்றி இருந்தது தெரிய வந்தது. அதையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சோத்துப்பாக்கம் அருகே தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்த பறக்கும் படையினர் அங்கு ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 47 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.