ஐ.டி. ஊழியரின் கிரடிட்கார்டில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மோசடி

கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1லட்சத்து 90ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
ஐ.டி. ஊழியரின் கிரடிட்கார்டில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மோசடி
Published on: 
Summary

கிரெடிட் கார்டின் புதிய திட்டத்தை ரத்து செய்ய உடனடியாக இணையதள முகவரியை பயன்படுத்துங்கள்" என்றார். மேலும் இதற்காக சுப்புராஜ் செல்போன் எண்ணிற்கு "லிங்க்" ஒன்றையும் அனுப்பி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை, சேர்ந்தவர் சுப்புராஜ்.சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கி ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கிரெடிட் கார்டு

இவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு மர்ம நபர்பேசினார். அப்போது,"நான் பிரபல தனியார் வங்கியின் மேலாளராக உள்ளேன். உங்களது கிரெடிட் கார்டின் புதிய திட்டத்தை ரத்து செய்ய உடனடியாக இணையதள முகவரியை பயன்படுத்துங்கள்" என்றார். மேலும் இதற்காக சுப்புராஜ் செல்போன் எண்ணிற்கு "லிங்க்" ஒன்றையும் அனுப்பி வைத்தார்.

பணம்

இதை உண்மை என நம்பிய சுப்புராஜ் மர்ம நபர் அனுப்பிய "லிங்க்" கை பயன்படுத்தி கிரெடிட் கார்டின் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணையும் அதில் பதிவு செய்தார். சிறிது நேரத்தில் அவரது கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1லட்சத்து 90ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

போலீசார் வழக்குப்பதிவு

இதனை கண்டு சுப்புராஜ் அதிர்ச்சி அடைந்தார். வங்கி அதிகாரி போல் பேசிய மர்ம நபர் நூதன முறையில் பணத்தை சுருட்டியது தெரியவந்தது.

இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com