கட்சி கொடி நிறத்தில் உடை அணிந்திருப்பது ஏன்? - எம்எல்ஏ தாஹிரா விளக்கம்

என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில் நிற்க வைத்து இருக்கிறார்.
எம்எல்ஏ தாஹிரா
எம்எல்ஏ தாஹிரா
Published on

எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ராணிப்பேட்டை த.வெ.க. எம்.எல்.ஏ. தாஹிரா பேசுகையில்,

‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்’

சட்டசபையில் கம்பீரத்துடன் அமர்ந்திருக்கும் எங்கள் தளபதி அவருக்கே இத்திருக்குறள் பொருந்தும்.

* வாயால் வடை சுட்ட காலம் போய், சுவையான வடை சுட்டு கையில் கொடுக்கும் காலம்.

* முதலமைச்சரை பேச சொல்லும் கூட்டம், அவர் பேசத் தொடங்கினால் ஓடுகிறது.

* தலைவருடன் கடந்த 27 ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன்.

* தமிழ்நாட்டில் முதல் பெண் ரசிகர் மன்றத்தில் நான் அந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன்.

* என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில் நிற்க வைத்து இருக்கிறார்.

* எந்த அரசியல்வாதிகளும், எந்த அமைப்பில் இருப்பவர்களும் இஸ்லாமிய பெண்களுக்கு முதல் இடம் கொடுத்தது இல்லை.

* எங்கள் தலைவர் ஆட்சி தொடங்கிய அன்றே எனக்கு கட்சியில் கொள்ளை பரப்பு இணை செயலாளராக பதவி கொடுத்தபோது அவர்களுடன் அமர வைத்து கவுரவித்தார்.

* அந்த கவுரம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள் அனைவருக்குமான பெருமை அளிப்பதுபோல் அன்று நடத்தினார்.

* அன்றே முடிவு செய்தேன். எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

* தளபதியால் நான்... தளபதிக்காகவே நான்... என்றும் தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசத்துடன் என் உயிர் உள்ளவரை நன்றியுடன் நடந்து கொள்வேன் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com