முதலமைச்சர் விஜய்யுடன் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் சந்திப்பு!

பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்த மக்கள் முதலமைச்சர்.
பெண்களின் கண்ணியத்தை காக்கும் முதலமைச்சர் விஜய்யின் உறுதியான நிலைப்பாட்டிற்கு MLA கனிமொழி சந்தோஷ் பாராட்டு!
Published on

பெண்களின் கண்ணியத்தையும், பொதுமக்களின் மரியாதையையும் பாதுகாக்கும் வகையில், அவதூறாகவும் இழிவாகவும், பேசுபவர்களுக்கு எதிராக எந்தச் சூழலிலும் சமரசம் செய்ய முடியாது என முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்த உறுதியான கருத்துக்கு, சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் விஜய், பெண்களைப் பற்றியும் பொதுமக்களைப் பற்றியும் அவதூறாகவும் இழிவாகவும் பேசுவதை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

முதலமைச்சரின் இந்தக் கருத்து, பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துவதாக MLA கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

“பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு எதிராக முதலமைச்சர் எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாடு, என்னைப் போன்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காது என்பதை முதலமைச்சர் அவர்களின் இன்றைய சட்டப்பேரவை கருத்து தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் அவமதிக்கும் எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்.”

என்று தெரிவித்தார்.

முதலமைச்சரின் இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு நேரில் வாழ்த்து மற்றும் பாராட்டுகளைத் தெரிவிக்கும் வகையில், MLA கனிமொழி சந்தோஷ், இன்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com