

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
இந்த தொடர் பிரசாரத்தை அவர் தனது சொந்த ஊரான திருவாரூரில் நேற்று தொடங்கினார்.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோருடன் சென்ற முதலமைச்சர், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜிக்கு ஆதரவாக பொதுமக்களிடம் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.
மார்க்கெட் பகுதிக்குள் சென்ற முதலமைச்சர் வியாபாரிகள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் மக்களுடன் கடையில் தேடீர் அருந்தினார்.
திருச்சியில் இன்று பிரசாரத்தில் ஈடுபடும் முதலமைச்சர் மாலையில் கரூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.