இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்! -மு.க.ஸ்டாலின்

"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்! -மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!

"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.

பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்! என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com