

சென்னை கீழ்பாக்கம் பகுதியில் நின்ற 2 மாணவிகளையும் சென்னை போலீசார் மீட்டனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம் பட்டு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
அங்கு பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார். மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்பாத நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே மகளுடன் படிக்கும் சக தோழியான சின்னவரிக்கம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் உங்கள் மகளும், எனது மகளும் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளியில் இருந்து போனில் தெரிவித்ததாகவும், எனது மகள் வீட்டில் இருந்த செல்போனை எடுத்து சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் பிளஸ்-1 மாணவிகள் 2 பேர் மாயமானதால் அவர்களை உறவினா்கள் மற்றும் தோழிகள் என பல்வேறு இடங்களில் தேடியும் அவா்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, மாணவிகளின் பெற்றோா் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி எடுத்துச் சென்றுள்ள செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து தேடி வந்தனர். ஒரே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 2 மாணவிகள் திடீரென காணாமல் போன சம்பவம் அந்த பகுதியிலும், பள்ளியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கம் பகுதியில் நின்ற 2 மாணவிகளையும் சென்னை போலீசார் மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவிகளை மீட்பதற்காக பேரணாம்பட்டு போலீசார் சென்னை புறப்பட்டு சென்றனர்.