களியக்காவிளை அருகே மாயமான நர்சிங் கல்லூரி மாணவி காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

மாயமான மாணவி காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் களியக்காவிளை பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.
களியக்காவிளை அருகே மாயமான நர்சிங் கல்லூரி மாணவி காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
Published on: 
Summary

அபர்ணா காதலனுடன் தஞ்சம் அடைந்திருப்பது குறித்து அவரது தாய்க்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள இளந்தோட்டுவிளை மலையடி பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் அபர்ணா (வயது18). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். படந்தாலுமூடு பகுதியில் உள்ள தனது தாயார் குடும்ப வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

உறவினர்கள்

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற அபர்ணா, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர்.

ஆனால் மாணவி குறித்த எந்த தகவலும்கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மகளை காணவில்லை என்று களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி அபர்ணாவை தேடி வந்தனர்.

மாயமான மாணவி

இந்தநிலையில் மாயமான மாணவி அபர்ணா, வாலிபர் ஒருவருடன் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அந்த வாலிபரும், அபர்ணாவும் காதலித்து வந்துள்ளனர். அந்த வாலிபர் குலசேகரம் பகுதியை சேர்ந்த அபிசேக் ஆவார். இவர் கூலி வேலைகளுக்கு சென்று வந்திருக்கிறார்.

போலீஸ் நிலையத்தில் ஆஜரான தொடர்ந்து மாணவி மற்றும் அவரது காதலனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து மாணவி அபர்ணா காதலனுடன் தஞ்சம் அடைந்திருப்பது குறித்து அவரது தாய்க்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அவர் தனது உறவினர்களுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்திருக்கிறார். ஆனால் தாயுடன் செல்ல மாணவி மறுத்துவிட்டார். விசாரணைக்கு பிறகு மாணவி தனது காதலனுடன் சென்றார்.

மாயமான மாணவி காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் களியக்காவிளை பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X