மீஞ்சூர் அருகே லாரி மோதி 2 பேர் பலி

விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீஞ்சூர் அருகே லாரி மோதி 2 பேர் பலி
Published on: 
Summary

மீஞ்சூர் அருகே லாரி மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் அருகே உள்ள மேலூர் கிராமம், திருவுடையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர்கள் மதன்(வயது41), தனசேகர்(53). இவர்கள் 2 பேரும் தனியார் நிறுவனத்தில் டிரைவர்களாக வேலை பார்த்தனர். இந்த நிலையில் நண்பர்களான இருவரும் மீஞ்சூர் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

விபத்து பலி

அப்போது அத்திப்பட்டு பகுதியில் தனியார் கிடங்கில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு கும்மிடிப்பூண்டி நோக்கி லாரி ஒன்று திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வந்தது. திடீரென அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மதன், தனசேகர் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மதனும், தனசேகரும் பலியானார்கள்.

போலீசார் விசாரணை

மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X