குலசை முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் சாமி தரிசனம்: தசரா திருவிழா ஏற்பாடுகள் தீவிர ஆய்வு!

லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kulasai Mutharamman Temple
Published on: 
Summary

உலகப்புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில், வரவிருக்கும் தசரா திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் நேரில் சென்று சாமி தரிசனம் செய்து, விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா வரும் அக்டோபர் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக தொடங்குகிறது.

மகிஷாசூரசம்ஹாரம்

12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் வரும் 20-ஆம் தேதி இரவு குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்கள் நேரில் ஆய்வு

திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் மீன்வளம்-மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் இன்று குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.

கோவிலில் மூலவரை தரிசனம் செய்த அவர்கள், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிகப் பந்தல்கள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். பக்தர்கள் எவ்வித சிரமுமின்றி அம்மனை தரிசித்துச் செல்ல தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தடையின்றி மேற்கச்சை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com