ஜெயலலிதா சிலைக்கு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது- அமைச்சர் விஸ்வநாதன்

கல்வியில் பின்தங்கிய மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது என்றார்.
அமைச்சர் விஸ்வநாதன்
அமைச்சர் விஸ்வநாதன்
Published on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாளில் சிலை அலங்கரிக்கப்பட்டு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது என்றார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று நடைபெற உள்ள மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன் எண்ணூர் கழிமுகம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதத்தை தொடர்ந்து அமைச்சர் விளக்கமும் அளித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய எம்எல்ஏ சண்முகம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா மாளிகை வளாகத்தில் உள்ள சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை. பிறந்தநாள் அன்று மட்டுமே மாலை போடப்படுகிறது. ஜெயலலிதா சிலையை தினமும் பராமரித்து மாலை அணிவிக்க வேண்டும், செலவை கூட நாங்கள் ஏற்க தயார். ஜெயலலிதா பலகலைக்கழகத்தை மீண்டும் தொடங்க வேண்டும். கல்வியில் பின்தங்கிய மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், எங்கள் அரசு, மேடம் ஜெயலலிதா அவர்களுக்கு என்றும் உரிய முக்கியத்துவத்தை இழந்து விடாது. லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை முறையாக தான் பராமரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாளில் சிலை அலங்கரிக்கப்பட்டு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com