மாணவர்கள், இளைஞர்கள் உரிமைகளை காக்க அரசு நடவடிக்கை: அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்

குஜிலியம்பாளையம் வட்டாட்சியர் தலைமை இடத்திலிருந்து தகவல்கள் சேர்க்க அனுப்பப்பட்டவர் தேவையில்லாமல் இதுபோன்ற கடிதத்தை எழுதி விட்டார்.
அமைச்சர் விஸ்வநாதன்
அமைச்சர் விஸ்வநாதன்
Published on

அனைத்து அரசு கல்லூரிகளின் கல்வி சூழல் மற்றும் ஒழுங்கு அமைதி பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதை முன்னிட்டு அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றார்.

தமிழக சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.மாரிமுத்து பேசும்போது, இடதுசாரிகளை இனம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாங்கள் உரிமைக்காக போராடுகிறோம், மேலும், உயர் கல்வித்துறை இடதுசாரி மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை சேகரித்து அனுப்ப அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இப்படி உரிமைக்காக போராடும் சுதந்திர நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ளலாமா? என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், குஜிலியம்பாளையம் வட்டாட்சியர் தலைமை இடத்திலிருந்து தகவல்கள் சேர்க்க அனுப்பப்பட்டவர் தேவையில்லாமல் இதுபோன்ற கடிதத்தை எழுதி விட்டார். எனக்கு தகவல் தெரிவித்தவுடன் அவர் பணியிட மாற்றம் செய்து விட்டோம், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்

அனைத்து அரசு கல்லூரிகளின் கல்வி சூழல் மற்றும் ஒழுங்கு அமைதி பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதை முன்னிட்டு அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தவறுதலாக சில வாசகங்கள் குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தது. அவ்வாறான வாசகங்கள் இடம்பெற்று இருப்பதை அறிந்த கல்லூரி இயக்குனரகம் உடனடியாக மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையினை திரும்ப பெறப்பட்டது. மாணவர்கள் இளைஞர்கள் நியாயமான உரிமைகளை காக்கும் அரசாக இந்த அரசு செயல்படும் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com