

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள ஆயுத பூஜை மற்றும் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து 6,199 சிறப்பு பேருந்துகள் உட்பட 8,390 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
* தீபாவளியை முன்னிட்டு நவம்பம் மாதம் 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 9,086 சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 15,659 பேருந்துகள் இயக்கப்படும்.
* பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் ரத்து செய்யப்படும் என வெளியாகும் தகவலில் உண்மையில்லை.
* ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வாங்கினால் அதை திரும்ப வசூலித்து ஒப்படைத்து வருகிறோம்.
* பண்டிகை நாட்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும்.
* கூடுதல் கட்டணம் வசூலித்தால் அம்னி பேருந்துகளை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ரெயில்வே துறையிடம் கேட்டுள்ளோம் என்றார்.