சென்னை தலைமைச் செயலகத்தில் 'டோரதி' படக்குழுவினருக்கு அமைச்சர் வன்னி அரசு பாராட்டு

சர்வதேச திரைப்பட விழாவில் டோரதி திரைப்படம் உலக அளவில் பிரீமியர் செய்யப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.
Minister Vanni Arasu
Published on: 
Summary

சென்னை தலைமைச் செயலகத்தில் 'டோரதி' படக்குழுவுக்கு அமைச்சர் வன்னி அரசு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இரு உயிர் நண்பர்களின் வாழ்க்கையில் ஒரு பெண்ணின் வருகைக்குப் பின் ஏற்படும் திருப்புமுனைகளையும், அவர்களது வாழ்நாள் பயணத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் டோரதி.

இந்தத் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் உலக அளவில் பிரீமியர் செய்யப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில், ‘டோரதி’ திரைப்படம் பல்வேறு தரப்பில் வரவேற்றை பெற்ற நிலையில், படக்குழுவினரை தலைமைச்செயலகத்தில் நேரில் அழைத்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பாராட்டினார்.

அங்கு வந்திருந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டவர்களுக்கு அமைச்சர் வன்னி அரசு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

டோரதி படக் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டோரதி' திரைப்படம் சமூகக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

சாதியக் கட்டமைப்பை உடைக்க முயலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள்.

திருநங்கைகள் மனித சமூகத்தின் ஓர் அங்கம் என்ற அங்கீகாரத்தைப் பெற வேண்டும். 'டோரதி' திரைப்படம் அவர்களுக்கான புதிய தொடக்கத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற படைப்புகள் மேலும் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com