பிரதமர் வேட்பாளர் விவகாரம்: த.வெ.க. அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் - அமைச்சர் ராஜேஷ் குமார்

2029 நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி தான்.
Rajesh Kumar
Published on

2029-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளராக ஆவார் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுஒருபக்கம் இருக்க நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும் போது தமிழ் நாட்டில் இருந்து பிரதமர் உறுவாக வேண்டும் என்று பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளராவார் என்ற கருத்து அதிகளவில் பரவத்தொடங்கியது.

காங்கிரஸ் எச்சரிக்கை:

இதனிடையே தனியார் நிறுவனம் நடத்திய அடுத்த பிரதமர் யார்? என்ற கருத்துகணிப்பில் முதலமைச்சர் விஜய் 3-ஆம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் வலுப்பெற்றது.

இந்த நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக எற்காவிட்டல் தவெக அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் திட்டவட்டம்:

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்ற மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் பதவி ஏற்பு நிகழ்வில் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசும் போது, “2029 நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி தான்!

ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் இதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம்,” என்று கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com