

ஒன்றிய – மாநில உறவுகளை மேம்படுத்த புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு, முந்தைய குழுவை மாற்றி செயல்பட உள்ளது.
அமைச்சர் நிர்மல்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time mkstalin sir..
ஒன்றிய – மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் ஒருவர் 04.05.2026 அன்று ராஜினாமா செய்தார்.
அண்ணன் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய சட்ட ஆணையத்தை (Law Commission) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது . இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை மேலும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கிலும், 07.08.2026 அன்று புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(அரசாணை எண். 202, சட்டம் (LC) துறையின் பத்தி 3(c)-ஐப் பார்க்கவும்.)
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டி. கிருஷ்ணகுமார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டீக்கா ராமன்.
டி.கே. ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., (அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்.)
ஏ. அருணகிரி, சட்டத்துறையின் முன்னாள் அரசுச் செயலாளர்.
பி. மோகன்தாஸ், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
ஆர். கோவிந்தராஜன், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
இவ்வாறு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.