கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்

தொடர் விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் இன்று சென்னை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்
Published on
Summary

போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று காலை 6 மணி முதல் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் மற்றும் பயணிகளின் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ஆய்வு

தொடர் விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் இன்று சென்னை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அப்படியாக வரக்கூடிய பொதுமக்களின் போக்குவரத்து பாதுகாப்பாக இருக்கிறதா மேலும் பேருந்துகள் குறித்து ஏதேனும் புகார் வருகிறதா என்று இன்று காலை 6 மணி முதல் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உடன் போக்குவரத்து துறை செயலாளர் நிர்மல்ராஜ் தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் மாநகரப் பேருந்து அதிகாரிகள் உட்பட பலர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டம்

நேற்றைய தினம் இதே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வரப்போகிற ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பேருந்துகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு கூட்டம் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு போக்குவரத்துச் செயலாளர் நிர்மல்ராஜ் தாம்பரம் மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் தாம்பரம் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அதிகாரிகள் மற்றும் போலீசார் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் போதிய பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வதை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com