தமிழகத்தின் உரிமைக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

பாஜக உறுப்பினராக இருந்தாலும் இந்த தீர்மானத்தில் தமிழன் என்ற முறையில் செயல்படுங்கள்.
Minister Aadhav Arjuna
Published on

தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்தனர்.

இதில், திமுக, காங்கிரஸ், மஜக, மமக, சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றியதாவது:-

மாநில சுயாட்சி இல்லாமல் இந்தியாவை உருவாக்க முடியாது என அண்ணா கூறி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதபோது அரசியலமைப்பில் முதல் தீர்மானம் கொண்டு வந்தது தமிழ்நாடு.

அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்தில் இருந்தாலும் தனித்தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.

அண்ணாவின் கொள்கை திமுக, அதிமுகவுக்கு மட்டுமல்ல, அவரது கொள்கை வழியில் வந்தவர்கள் தவெகவினர்.

உயிருள்ள வரை மாநில சுயாட்சிக்காக இதே பேரவையில் குரல் கொடுத்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா.

உள்ளாட்சி, கட்சியில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும்போது நாடாளுமன்றத்தில் ஏன் மாற்றம் கூடாது என கேட்கின்றனர்?

மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற விகிதாசாரத்தை உருவாக்கவில்லை அமெரிக்கா.

5,6 வடமாநிலங்கள் சேர்ந்தாலே ஒரு பிரதமரை உருவாக்கும் நிலையில் உள்ளது. அது மாற்றப்பட வேண்டும்.

அதிகாரம் குஜராத், உ.பி.க்கு மட்டுமல்ல, நமது குரல் அதிகாரம் பிரதமராக ஒலிக்க வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும்.

இன்றைய தீர்மானம் என்பது காங்கிரஸ் பாஜக என்பதல்ல, மாநில சுயாட்சியை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்.

பேரவையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள பாஜக, காங்கிரசின் நிலை நாளை நாடாளுமன்றத்தில் நமக்கு வரக்கூடாது.

பாஜக உறுப்பினராக இருந்தாலும் இந்த தீர்மானத்தில் தமிழன் என்ற முறையில் செயல்படுங்கள்.

தொகுதி மறுவரையறையில் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு முதலில் குரல் கொடுத்தார் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். தென்னிந்திய விகிதாசாரம் குறைவதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.

தமிழ்நாட்டிற்கான விகிதாச்சாரம் உயர்ந்தாலும் கூட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். வடகிழக்கு மாநிலங்களின் நிலை நமக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர்.

ரூ.1 தந்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறார்கள், நாம் உழைத்தாலும் நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியா நிலை.

2026-க்கு பின் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தற்போது வேறு நிலை இருக்கலாம். ஆனால் மாநில சுயாட்சி பிரச்சனை ஒன்று சேருக.

தமிழ்நாட்டிற்கான பிரச்சனை என்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும்.

ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். தமிழக எம்பிக்கள் 39 பேரும் அவையில் இருந்த வெளிநடப்பு செய்யாமல், சட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com