மழைக்காலங்களில் கட் அவுட், பேனர்கள் வைக்க தடை- த.வெ.க.வினருக்கு அமைச்சர் என்.ஆனந்த் எச்சரிக்கை

பேனர்கள், கட் அவுட்கள் வைத்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு உள்ளார்.
Minister N Anand
Published on
Summary

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் த.வெ.க.வினர் பேனர் மற்றும் கட் அவுட் வைக்க கூடாது என தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவுபடி பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் ஏற்கனவே நிர்வாகிகளுக்கு உத்தவிட்டுள்ளார்.

மீறி வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

மழைக்காலங்களில்

இந்நிலையில் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் அமைச்சர் என்.ஆனந்த் மழைக்காலம் வருவதால் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை, கட் அவுட்களை அகற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து த.வெ.க.வினருக்கு அமைச்சர் என்.ஆனந்த், நம் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலிலும் த.வெ.க.வினர் ஈடுபட கூடாது.

பேனர்கள், கட் அவுட்கள் வைத்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு உள்ளார்.

எனவே பருவமழை தொடங்க இருக்கும் நேரத்தில் தங்களது பகுதியில் ஏதேனும் கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைத்திருந்தால் உடனடியாக அகற்றி விட வேண்டும்.

பேனர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது. மழைக் காலங்களில் பொது மக்களுக்கு த.வெ.க.வினர் பாதுகாப்பாக இருந்து பல்வேறு உதவிகள் செய்ய வேண்டும். மக்கள் பாது காப்பே நமக்கு முக்கியம் என அமைச்சர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com