வி.எஸ்.பாபுவின் மறைவு வடசென்னை மக்களுக்கு பேரிழப்பு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

அண்ணன் வி.எஸ்.பாபு விரும்பியபடி வடசென்னை வளர்ச்சிக்காக நாங்கள் செயல்படுவோம்.
TN Minister Adhav Arjuna
Published on: 

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் வீழ்த்தி எம்எல்ஏ-ஆக வெற்றி பெற்று புகழடைந்தவர் வி.எஸ்.பாபு.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2.24 மணியளவில் வி.எஸ்.பாபு உயிர் பிரிந்ததாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீண்ட சுவாச பாதிப்பு காரணமாக செப்டம்பர் 9ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வி.எஸ்.பாபு இன்று பிற்பகலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் மறைவை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு அன்பானவர். தலைவரின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றவர். எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்.

தவெகவின் கடுமையான காலகட்டத்தில் எங்களுடனும் தலைவருடனும் சேர்ந்து பணியாற்றியவர் வி.எஸ்.பாபு.

வடசென்னையின் முகமாக இருந்தவர் வி.எஸ்.பாபு. சென்னையில் குறிப்பாக வடசென்னையில் மக்கள் இன்னும் கஷ்டப்பட்டு இருக்காங்க எனக்கூறியவர் வி.எஸ்.பாபு. வடசென்னை மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வி.எஸ்.பாபு.

தலைவர் விஜயை முதலில் சந்தித்தபோதே மக்கள் பிரச்சனைகளை பேசியவர் வி.எஸ்.பாபு.

பெரம்பூருக்கு அடுத்து வடசென்னைக்குத்தான் வரவேண்டும் என தலைவர் விஜயை பிரச்சாரத்திற்கு அழைத்தவர் வி.எஸ்.பாபு.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவு வடசென்னை மக்களுக்கு பேரிழப்பு. அண்ணன் வி.எஸ்.பாபுவின் குடும்பத்திற்கு என்றும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.

அண்ணன் வி.எஸ்.பாபு விரும்பியபடி வடசென்னை வளர்ச்சிக்காக நாங்கள் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X