

முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிகை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு பேசுகையில், தமிழ்நாட்டின் அனைத்து முதல்வர்களும் இருந்த அறையை எதற்காக மாற்ற வேண்டும்?. தமிழ்நாட்டை முன்னேற்றிய திட்டங்கள் அனைத்தும் இந்த அறையில் இருந்ததான் இயற்றப்பட்டன. கலைஞர் கட்டிய நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வர் செல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். நாமக்கல் கவிஞர் மாளிகை சென்றால் அரசு அலுவலர்கள் உணவு அருந்துவது உள்ளிட்டவற்றில் சிரமம் ஏற்படும் என்றார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில்,
* வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனை மக்களுக்கே கொடுப்பது போல் சிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார் எ.வ.வேலு.
* கடந்த 5 வருட பத்திரிகை செய்திகளை எடுத்து பார்த்தால் பொதுப்பணித்துறையில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கும்.
* முதல்வர் அறை மாற்றத்திற்கான டெண்டர் இன்னும் முடியவில்லை. முதல்வர் அறையை மாற்றுவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரில் கோளாறு என வெளியான செய்தி தவறு.
* 200 பேர் வரை அமரக்கூடிய வகையில் அறை இருக்க வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறார்.
* கலைஞரும், ஜெயலலிதாவும் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட வேண்டும் என நினைத்தனர்.
* முதலமைச்சர் தன்னுடைய வசதிக்காக அறையை மாற்றவில்லை, அனைவருக்காகவும் மாற்றுகிறார்.
* தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை.
* முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம்.
* எளிமையை விரும்பும் முதலமைச்சர் விஜய், தன்னை சுற்றி இருப்பவர்களை நினைத்துதான் அறையை மாற்றுகிறார்.
* முதல்வர் இப்போது இருக்கும் அறையில் முறையான கழிப்பறை வசதி கூட இல்லை என்பதால் மாற்றுகிறோம்.
* அதிகாரிகள் எந்த திட்டத்தை தீட்டினாலும் அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளியிடப்படாது.
* 5 வருடத்தில் நடைபெற டெண்டர் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம்.
* நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது என்றார்.