

ஆதவ் அர்ஜுனாவும் நானும் தம்பதிகளாகப் பிரிந்து, தனித்தனியான பாதைகளில் பயணிப்பது என பரஸ்பரம் முடிவெடுத்துள்ளோம் என்று அவரது மனைவி டெய்சி மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், அவரது மனைவி டெய்சி மார்ட்டினும் பரஸ்பரம் மனம் ஒத்து பிரிவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக டெய்சி மார்ட்டின் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் இணைந்திருந்தோம். அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த பயணமாக எங்களது வாழ்க்கை அமைந்திருந்தது. நண்பர்கள், வாழ்க்கைத் துணைவர்கள், பெற்றோர் என வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களையும் ஒன்றாகக் கடந்து வந்திருக்கிறோம்.
இந்நிலையில், இன்று ஆதவ் அர்ஜுனாவும் நானும் தம்பதிகளாகப் பிரிந்து, தனித்தனியான பாதைகளில் பயணிப்பது என பரஸ்பரம் முடிவெடுத்துள்ளோம்.
இது எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருந்தாலும், எங்களது குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், அதன் மகிழ்ச்சி மற்றும் நலனை உறுதி செய்வதிலும் எங்களது அர்ப்பணிப்பு எப்போதும் தொடரும். எங்களது குழந்தையின் மகிழ்ச்சியும் நலனுமே எங்களுக்கு மிக முக்கியமானது. ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் தேர்ந்தெடுக்கும் அனைத்துப் பாதைகளிலும் மகிழ்ச்சி, மன அமைதி மற்றும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
இந்த மாற்றத்தைக் கடந்து செல்லும் எங்களுக்கு உங்களது புரிதல், அன்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கான மரியாதையை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடனும் மரியாதையுடனும்,டெய்சி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.