தி.மு.க. ஆட்சியில் வீரமணி வழக்குமீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

மதுராந்தகம் பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு வேட்பாளர் மரகதம் குமரவேல் வேல் பரிசளித்தார்.
aadav arjuna
Published on: 
Summary

மதுராந்தகம் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. ஆட்சியில் வீரமணி வழக்குமீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் இடைத்தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக தலைவர்கள் முதல் 15 அமைச்சர்கள் தோல்வி

தேர்தலுக்கு முன் முதலமைச்சர் விஜய் 10 மீட்டிங்தான் பேசினார். திமுக தலைவர், திமுக பொதுச்செயலாளர், பொருளாளரின் மகன் தோற்றுவிட்டனர். திமுக தலைவர்கள் முதல் 15 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

1931-க்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் தீர்மானத்தை விஜய் கொண்டு வந்தார்; திமுக ஏன் கொண்டுவரவில்லை?

ஜெம் வீரமணிமீது குற்றச்சாட்டில் எப்.ஐ.ஆர். போட்டு, வழக்கை முடிக்க முயற்சித்தனர். ஆனால் ஒரு ஏடிஜிபி, காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுத்தவர் முதலமைச்சர் விஜய்.

வீரமணி வழக்கு பற்றி தவெக பேசக்கூடாதா?

வீரமணி வழக்கு பற்றி தவெக பேசக்கூடாதா? நாங்கள் பேசக்கூடாது என திமுக நீதிமன்றம் சென்றுள்ளது.

திமுக ஆட்சியில் வீரமணி வழக்குமீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

திமுக ஆட்சியில் ஏன் வழக்கு முடித்துவைக்கப்பட்டது என்பதற்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். அதன் பின்னணியில் அழுத்தம் கொடுத்தது யார்? பின்னணியில் நடந்த பணப்பரிவர்த்தனை யாருக்குச் சென்றது?

பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை

பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சமரசம் செய்வதே இல்லை.

தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி எடப்பாடியில் வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி.

காணாமல் போன தவெக வேட்பாளர் அருண் குமார், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்க்கப்பட்டார்.

மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. பெறும் வெற்றி 25 ஆண்டுக்கான வெற்றியாக மாறவேண்டும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com