பால்குடம் எடுக்கும் மியா கலிஃபா... சர்ச்சையான கோயில் விழா பேனர்

பேனரில் மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர்.பேனர் அச்சிட்ட சில இளைஞர்களுக்கு 18 வயது கூட பூர்த்தி ஆகவில்லை.
பால்குடம் எடுக்கும் மியா கலிஃபா... சர்ச்சையான கோயில் விழா பேனர்
Published on: 

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதுகின்றனர். அந்த நாளில் கோவில்களில் விளக்கு பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை பெண்கள் மேற்கொள்வார்கள்.

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நாளை நடைபெறவுள்ளது.

இந்த விழாவிற்கு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பேனர் அடித்துள்ளனர். அந்த பேனரில் பிரபல பார்ன் நடிகை மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை இளைஞர்கள் அச்சிட்டுள்ளனர்.

அந்த பேனர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேனரில் இளைஞர்கள் ஆதார் கார்டு வடிவில் தங்களது பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை அச்சிட்டுள்ளனர். அதில் உள்ள சில இளைஞர்களுக்கு 18 வயது கூட பூர்த்தி ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com