36-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
36-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை
Published on

சென்னை:

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36வது நினைவு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளான இன்று சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com