மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டுக்களும் இயங்கி வருகிறது. அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்களுடன் கூடிய பழைய அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையமும் இயங்கி வருகிறது.

இதில், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் இயக்கம் நிறுத்தப்பட்டு, அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக இந்த அனல் மின் நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகா வாட்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டுக்களும் இயங்கி வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com