60 அடிக்கும் கீழே சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடந்து சரிவு கண்டுள்ளதால் சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Mettur Dam
Published on: 
Summary

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது டெல்டா விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 787 கன அடியிலிருந்து 696 கன அடியாகக் குறைந்துள்ளது. அதேசமயம், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட திறக்கப்படும் நீரின் அளவு பலமடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 59.58 அடியிலிருந்து 59.13 அடியாகக் குறைந்துள்ளது. தற்போது அணையின் மொத்த நீர் இருப்பு 24.04 டிஎம்சியாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடிக்கும் கீழே சென்றுள்ளது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியன்று டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் நடப்பாண்டுக்கான சம்பா சாகுபடிக்குத் தடையின்றித் தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com