மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2102 கனஅடியாக அதிகரிப்பு

அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை
Published on: 
Summary

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 1812 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2102 கனஅடியாக தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது.

மேட்டூர் அணைக்கு கடந்த மாதம் 4-ந் தேதி முதல் தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் 90 அடியை தாண்டியது. இதையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று 28-வது நாளாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1812 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2102 கனஅடியாக தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது.

அணையின் நீர்மட்டம் 79.61 அடியாக குறைந்து காணப்பட்டது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 41.56 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com